அரபிக்கடல் பகுதியில் அதி தீவிர புயல்

இந்த வட கிழக்கு பருவக்காற்று காலத்தில் தமிழ்நாடு நேற்று வரை [-29%] என்ற அளவில் குறைவாய் மழை பெற்று பற்றாக்குறை கணக்கில் இருக்கிறது. வங்க கடனீர் வெப்பம்  27 செல்சியஸ் என்ற அளவிலும் மேலாக இருப்பதால் காற்றழுத்த தாழிகள் உண்டாகும் என்ற எதிர் பார்ப்பும் உள்ளது. நண்பர் ஒருவர் சொன்னது போல இன்றைய வானிலை டிசம்பர் மாதத்திய காலநிலையை ஒத்து அமைந்து விட்டால் தமிழகம் குடிநீரின்றி தவிக்கும்.

அரபி கடல் “சாப்ளா” புயல் அதிதீவிர புயலாக மாறிவிட்டது. அரபி கடலின் ஓமன் நாட்டை ஒட்டிய கடல் பகுதியில் கடனீர் வெப்பம் சற்று குறைவாய் உள்ளது. இது “பற்றிசியா” புயலை போல் ஆகும் என  எதிர்பார்க்கப்படுகிறது..  பொறுத்து இருந்து பார்ப்போம்.

chapla image 301015

இந்நிலையில் இலங்கை அருகே நிலை கொண்டிருந்த குறைந்த காற்று அழுத்த தாழ்வு மையம் வலுவிழந்துவிட்டது. தற்பொழுது இலங்கைக்கு தென் மேற்கே ஓர் மேல் அடுக்கு காற்று சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் பரவலான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது, ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய கூடும். குறிப்பாக ராமேஸ்வரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் பரவலான மழை பெய்ய கூடும் சில இடங்களில் பலத்த மழை எதிர்பார்க்கலாம்.

30_10