வடகிழக்கு பருவ மழை – மேற்கு மாவட்டங்களில் மழை வாய்ப்பு

நேற்று தென் தமிழகத்தில் கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்தது.  கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூரில் 107 மிமீ மழை காலை 5:00 மணி வரை பெய்து உள்ளது.  இதே போல் திருவட்டார் மற்றும் அகஸ்தீஸ்வரம் பகுதிகளில் 50 மிமீக்கு அதிகமாக மழை பெய்து உள்ளது.

இன்றும் தென் தமிழகத்தில் கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய கூடும்.  இதே போல் ராமநாதபுரம் மாவட்டத்திலும் ஓரிரு இடங்களில் நல்ல மழை பெய்ய கூடும்.

இன்றும் மேற்கு தமிழக மாவட்டங்களான கோவை மற்றும் ஈரோடு பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை வாய்ப்பு உள்ளது.  குறிப்பாக வால்பாறை பகுதியில் கனத்த மழை பெய்ய கூடும். மதியம் / மாலை நேரங்களில் திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்ய கூடும். டெல்டா பகுதிகளில் திருச்சி, தஞ்சாவூர் மற்றும் பெரம்பலூர் பகுதிகளில் ஓரிரு இடங்களில் சற்று மிதமான மழைக்கான வாய்ப்பு உள்ளது.

கடலோர பகுதிகளில் காற்றின் திசை சற்று மாறி உள்ளதால் கடலோர பகுதிகளில் பரவலாக மழை பெய்ய கூடிய வாய்ப்பு சற்று குறைந்து உள்ள போதிலும் ஓரிரு இடங்களில் சில சமயம் பலத்த மழை பெய்ய கூடும்.

31_10

சென்னையில் இன்று மாலை பொழுதில் மழைக்கான வாய்ப்பு உள்ளது, சில இடங்களில் சற்றே மிதமான மழை பெய்ய கூடும்.  குறிப்பாக மேற்கு புறநகர் பகுதிகளில் மழைக்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.