வடகிழக்கு பருவ மழை – சென்னையில் கண மழை

அரபி கடலில் 13.8 வடக்கு அட்ச ரேகை / 57.3 கிழக்கு தீர்க்க ரேகை அருகில் “சாப்ள” புயல் வீறு கொண்டு நிற்கிறது. தற்சமயம் இதன் நகர்வு நேர் மேற்காக உள்ளது. கடலில் இருந்து [தென் கிழக்கு திசையில் இருந்து] ஈர்க்கப்படும் ஈரக்காற்று தடை பெற்று விட்டதால் புயல் வலிமை குன்றத் தொடங்கும்.  தவிரவும் குளிர்ந்த வறண்ட தரைக்காற்று தாக்கம் ஏற்படுத்தும் போது சடசடவென்று  அதன் வீரியம் குறைந்து விடும் . தற்சமயம் ஏடென் வளைகுடாவின் தலைப்பில் நிலை கொண்டு உள்ளது

dundee 311015 15Z

மழை விவரம்: மீனம்பாக்கம் =10.0 மில்லிமீட்டர் / கிண்டி =42.2 மில்லிமீட்டர் /மெரினா கடற்கரை =18.8மில்லிமீட்டர் என்ற வகையில் தான் சென்னையில் மழை பெய்து உள்ளது. நேற்றிய மழை குறிப்பாக சென்னை நகரை மையமாக கொண்டு பெய்த மழையோ என்று எண்ணத் தோன்றுகிறது. மழை நெல்லை மாவட்டம் தொடங்கி விருதுநகர் ,சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர், சென்னை என்று கடலோரமாக [தென்மேற்கு வட கிழக்காக]மழை பரவி உள்ளது.