வடகிழக்கு பருவ மழை தீவிரம் உட்புற மாவட்டங்களில் கண மழை வாய்ப்பு

கடந்த ஓரிரு தினங்களாக வடகிழக்கு பருவ மழை தமிழகத்தின் உட்புற பகுதிகளில் தீவிரமாக நிலவி வருகிறது. நேற்று திருவண்ணாமலை, கோயம்புத்தூர்,  திருப்பூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பல இடங்களில் மழை பெய்தது, திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் அதிகாலை 1:00 மணி வரை 68 மிமீ மழை பதிவாகியது.

Slide2

அரபிக்கடல் பகுதியில் உருவாகி உள்ள குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி மற்றும் வங்க கடலில் ஆந்திர கரையோரம் நிலவி வரும் மேல் அடுக்கு காற்று அழுத்த சுழற்சி காரணமாக தென் இந்தியாவில் மழை மேகங்கள் ஊடுருவி வருகின்றன, இதனால் உட்புற பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை மேலும் வலு பெற கூடும் என எதிர்பார்க்கபடுகிறது

Slide1

குறிப்பாக இன்று தென் தமிழகதில் மதுரை, விருதுநகர், திருநெல்வேலி. கன்னியாகுமரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேற்கு மாவட்டங்களில் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் ஆகிய பகுதிகளில் பல இடங்களில் மழை பெய்ய கூடும் சில இடங்களில் கண மழை வாய்ப்பு உள்ளது.

வடக்கு தமிழக மாவட்டங்களில் திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய பகுதிகளில் சில இடங்களில் பலத்த மழை பெய்ய கூடும்; இதே நிலையில் வடக்கு கடலோர பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழைக்கான வாய்ப்பு உள்ளது.  இந்த ஆண்டில் மிக அதிக மழை பெய்ய கூடிய நாளாக இன்று அமைய கூடும்.