அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி

வலை பதிவர்கள் வானிலை முன்னறிவிப்பு செய்தலை விட , மதிப்பு கூட்டிய சேவையாக விவசாயிகள் பயன் பெரும் வகையில் வானிலை தகவல்கள், அன்றாடம் மாந்தர் “வெயில் மழை ” பற்றி அறிந்து கொள்ளும் வகையில் எளிய தகவல்களும், இயற்கை பேரிடர் காலத்து உற்ற துணையாய் வழிகாட்டி நின்று  உதவியும் செய்தால் நலம் பயக்கும். எண்ணிறைந்த இயற்கை ஆர்வலர் வலை பதிவரிடம் தகவல் பெரும் வகையில் செயல்பாடுகள் இருத்தல் நலம்.

Capture

காவேரி நதி தீர [கடைமடை பகுதி] விவசாயிகள் தண்ணீரை வயலில் இருந்து வடித்து நீர் தேங்காமல் பார்த்து கொள்ளல் வேண்டும். இன்று வரையில் வட கிழக்கு பருவக்காற்று வழமையான அளவிலே மழை தந்து இருக்கிறது. இதே போல் நவம்பர் இறுதி வரையில் மழை இருந்தால் குடிநீர் பிரச்னை இருக்காது.

மற்றுமோர் வதந்தி உள்ளது. நவம்பர் 15 தேதி தொடக்கம் 29 தேதி வரையில் கதிரவன் இல்லாது இருள் சூழும் என்பது வதந்தி. இருந்தாலும் நீங்களும் அறிந்து கொள்ள  வேண்டும் என்ற நோக்கில் தெரிவிக்கிறேன். பீதி கொள்ளற்க.

அரபிக்கடல் பகுதியில் ஓர் புதிய குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.  இதன் காரணமாக மேற்கு கரையோர பகுதிகளில் மழை பெய்ய கூடும்.  முந்தைய சாப்ளா புயல் போல இந்த சலனமும் மேற்கு நோக்கியே நகரும் என எதிர்பார்க்க படுகிறது