கடலோர தமிழகத்தில் பலத்த மழை வாய்ப்பு

வங்க கடலில் உருவாகி வரும் குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடலோர தமிழக பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உருவாகி உள்ளது.  நேற்று இரவு டெல்டா பகுதிகள் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சில இடங்களில் பரவலாக மழை பெய்தது.

7_11_1

இலங்கைக்கு கிழக்கே / தென்கிழக்கே நிலை கொண்டுள்ள மேல் அடுக்கு காற்று அழுத்த சுழற்சி இன்று குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலையாக உருவாக கூடும் என எதிர்பார்கிறோம்.  இந்த குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி வலு பெறுவது பற்றி வானிலை படிவங்களில் வேறுபாடு உள்ள போதிலும் பொதுவாக இந்த சலனம் இந்திய கடற்கரை நோக்கி நகர்வதில் ஒற்றுமை உள்ளது.

இதன் காரணமாக கடலோர தமிழகத்தில் பரவலாக மழை இன்று முதல் துவங்க கூடும்.  ஒரு சில இடங்களில் சற்று மிதமான மழை பெய்ய கூடும்.  மரக்காணம் முதல் வேதாரண்யம் வரையிலான கடலோர பகுதிகளில் சில இடங்களில் பலத்த மழை பெய்ய கூடிய வாய்ப்பு அதிகமாக உள்ளது.

7_11_2

சென்னையில் காலை நேரம் பல இடங்களில் மழை பெய்ய கூடும்.  இன்று இரவு முதல் மழை வலு பெற கூடும்.