கடலோர தமிழகத்தில் கண மழை வாய்ப்பு

சென்னைக்கு தென் கிழக்கே 650 கிமீ தொலைவில் வங்க கடலில் உருவாகி வரும் குறைந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக தமிழக கடலோர பகுதிகள் மற்றும் தென் ஆந்திராவின் சில இடங்களில் கண மழை வாய்ப்பு உள்ளது.

நேற்று சென்னையில் பல பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது.  குறிப்பாக நகரின் மேற்கு மற்றும் வடக்கு புறநகர் பகுதிகளில் நல்ல மழை பெய்தது.  மாதவரம், புழல், பூந்தமல்லி, செம்பரம்பாக்கம் ஆவடி ஆகிய பகுதிகளில் 15 மிமீக்கு மேல் மழை பதிவாகியது.

8_11

வங்க கடலில் நிலை கொண்ட கு.கா. மண்டலம் இன்னும் தொலைவில் உள்ளது.  நாகைக்கு தென் கிழக்கே ஏறக்குறைய 500 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. அதன் ஒரு வெளி விளிம்பு மேக கூட்டம் சென்னையை நோக்கி வட கிழக்கில் இருந்து வருகிறது. மிதமானது முதல் கனமழை நாகை தொடங்கி சென்னை முடிய இருக்கும். இடி மேகம்  வளர்ந்து   நிற்கும் உயரத்தை செய்மதி படம் காட்டுகிறது.
அரபி கடலில் “மெக்ஹ்” புயல் தவிர  புயலாக மாறிவிட்டது. இது பெரும்பாலும் முந்தய புயல் சென்ற பாதையில் செல்லும்.
காவேரி கடை  மடை விவசாயிகள் தினமும் வயலுக்கு சென்று நீரை இறைத்து விட வேண்டும். பாத்தி வசதி இருந்தால் வடித்து விடுங்கள். வேளாண் அதிகாரிகள் அல்லது முன்னோடி விவசாயிகளை கலந்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுங்கள்.
மீனவர்கள் இயந்திர வள்ளத்தில் மீன் பிடிக்க செல்லலாம். மீன் பாடு மிகுதியாகும்.

8_11_1