தென் இந்தியாவில் பல இடங்களில் மழை வாய்ப்பு

இலங்கை ஒட்டிய வங்க கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள மேல் அடுக்கு  காற்று அழுத்த சுயற்சி காரணமாக தென் இந்தியாவின் பல பகுதிகளில் அடுத்த ஓரிரு நாட்களில் மழை வாய்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த மேல் அடுக்கு  காற்று அழுத்த சுயற்சி காரணமாக வானிலையின் கீழ் நிலையில் அதிக ஈர பதம் காரணமாக தென் தமிழகம் மற்றும் கடலோர பகுதிகளில் மழை பெய்ய கூடும்.

Weather_map

மேலும் மேலடுக்கில் நிலவும் நிலையற்ற தன்மை காரணமாக வட தமிழகத்தின் உட்புற பகுதிகளில் சில இடங்களில் மழை பெய்ய கூடும்.

இந்த மேல் அடுக்கு  காற்று அழுத்த சுயற்சி குறைந்த அழுத்த தாழ்வு நிலையாக மாறுமா என ஓரிரு தினங்களில் தெளிவு கிடைக்கும்.

சென்னையை பொருத்த வரை மழைக்கான வாய்ப்பு ஓரளவு தெளிவாக உள்ளது, திங்கள் இரவு அல்லது செவ்வாய் காலை முதல் மழை பெய்ய கூடும்.