வங்க கடலில் புயல் சின்னம் – வட தமிழகத்தில் கரையை கடக்க கூடும்

வங்க கடலில் நிலவி வந்த குறைந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலம் தீவிரம் அடைந்து இன்று மாலை அளவில் புயலாக மாற கூடும் என இந்திய வானிலை துறை எதிர்பார்கிறது. இதன் காரணமாக கடலோர தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

Slide2

குறிப்பாக வட தமிழக பகுதிகளில் நேற்று முதல் பலத்த மழை பெய்து வருகிறது.  சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்திய வானிலை துறையின் தானியங்கி வானிலை மையம் நேற்று காலை 8:30 மணி முதல் காலை 5:00 மணி வரை 116 மிமீ மழை பதிவு செய்து உள்ளது. இதே போல் சென்னையை ஒட்டி பல பகுதிகளில் 100 மிமீக்கு மேல் மழை பதிவாகி உள்ளது.

Slide4

இன்றும் வட தமிழக பகுதிகளில் பலத்த மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.  இதே போல் இன்று மாலை முதல் உட்புற பகுதிகளில் மழையின் அளவு அதிகரிக்கும்.  சில இடங்களில் மிக கனத்த மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.