தீப திருநாள் மழை

வங்க கடலில் நிலை கொண்டிருந்த அழ்ந்த குறைந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலம் நேற்று மாலை புதுச்சேரி அருகே கரையை கடந்தது.  இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் வரலாறு காணாத மழை பொழிந்தது. நெய்வேலியில் ஆறு மணி நேரத்தில் 45 செ.மி. மழை அளவு பதிவு ஆகியது.

10_11_1

சென்னையில் தற்சமயம் நிலவும் காற்றின் திசை மற்றும் போக்கைப் பார்த்தால், நேற்று வரையில் மழை தந்த அந்த காற்று மண்டலம் முழுவதுமாக கரை கடந்தது எனலாம்.

091115 2320 Z wind

இயற்கை பேரிடர் மேலாண்மை துறையினர் வற்புறுத்துவது போல கடற்கரை எங்கும் அமைந்து உள்ள மீனவ கிராமங்களுக்கு “டிஜிட்டல் பிரஷர் இன்டிகேட்டர்” என்னும் கருவியை வழங்கினால் இன்னும் துல்லியமாக புயல் கரை கடக்கும் இடம் கண்டு அறிந்து விடலாம். மேக வட்டத்தின் ஒரு விளிம்பு மழை மேகம் பெங்களூர் வழியாக ஹோசூர் வரை நீண்டு ஹோசூரில் 94 மிமி மழையும், திருமலையில் 277 மிமி, திருப்பதியில் 118மிமி அளவிலும் மழை (இன்று 10.11.2015 /0430 மணி வரை) தந்து உள்ளது.  இது அரபி கடலில் நுழைந்து அங்கு ஒரு கு.கா மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது.