வடகிழக்கு பருவ மழை தீவிரம் – இன்று தென் தமிழகத்தில் மழை வாய்ப்பு

நேற்று வட தமிழகத்தில் சென்னை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் பல இடங்களில் பலத்த மழை பெய்தது.  சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்திய வானிலை துறை தானியங்கி வானிலை மையத்தில் 60 மிமீ மழை பதிவாகியது.

12_11_2

வட தமிழகத்தில் கரையை கடந்த அழ்ந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலம் தற்பொழுது இந்திய தீபகற்பத்தை கடந்து கேரளாவை ஒட்டிய கடற்பகுதியில் மேல் அடுக்கு காற்று அழுத்த தாழ்வு சுழற்சியாக நிலை கொண்டுள்ளது.  இந்த சுழற்சி காரணமாக மேற்கு கடலோர பகுதிகள் மற்றும் தென் தமிழகத்தில் சில பகுதிகளில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

12_11_1

குறிப்பாக மதுரை, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் சில இடங்களில் கண மழை பெய்ய கூடும்.  திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய கூடும் ஓரிரு இடங்களில் கண மழை பெய்ய கூடும்.  வட கடலோர பகுதிகளில் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் அந்தமான் அருகே உருவாகி வரும் சலனம் காரணமாக மற்றொரு குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன.