வங்க கடலில் மீண்டும் ஒரு குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி

வங்க கடலில் அந்தமான் அருகே மற்றொரு காற்று அழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.  இது தற்பொழுது இலங்கைக்கு கிழக்கே 550 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.

13.11.2015 -நேற்று நெல்லை, குமரி, தூடி மாவட்டங்களில் முற்பகலில் ஆங்காங்கே சுமாரான மழை பெய்தது.  நிலநடுக்கோட்டு பகுதியில் “நிலநடுக்கோட்டு தாழி ” (Equatorial trough) ஏற்படுவது வழமையான ஒன்று. அதாவது வட கிழக்கிலிருந்து வீசும் காற்றும் தென் கிழக்கிலிருந்து வீசும் காற்றும் குவிவதின் விளைவாய் குறைந்த காற்றழுத்த மண்டலங்கள் உருவாகும்.

dundee141115 00Z

இந்திய வானிலை துறையின் கணிப்பின் படி அடுத்த 24 – 48 மணி நேரத்திற்குள் இந்த குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி நன்கு அமைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதியாக மாற கூடும்.  இதன் காரணமாக கடலோர தமிழக பகுதிகளில் மேலும் சில நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய கூடிய வாய்ப்பு உருவாகி உள்ளது.  இன்று காலை முதல் டெல்டா மாவட்டங்களில் மழை துவங்க கூடும்.  படிப்படியாக வட தமிழக கடலோர பகுதிகளில் மாலை / இரவு முதல் மீண்டும் மழை துவங்க கூடும்.’  நாளை முதல் சில இடங்களில் பலத்த மழை எதிர்பார்க்கலாம்.

14_11_2

இந்த குறைந்த காற்று தாழ்வு பகுதி இலங்கையின் வட மேற்கு பகுதிகளில் சற்றே உரச கூடும் என வானிலை படிவங்கள் எதிர் பார்க்கின்றன இதன் காரணமாக சற்று வலு இழக்க கூடும் என என்னலாம். அடுத்த 24 – 48 மணி நேரத்திற்குள் இந்த குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதியின் போக்கை பற்றி குறிப்புகள் உருவாகி விடும்.

14_11_1