வங்க கடலில் காற்று அழுத்த தாழ்வு மண்டலம் உருவாக கூடும்

நேற்று டெல்டா மாவட்ட பகுதிகளில் வங்க கடலில் நிலை கொண்டிருக்கும் நன்கு அமைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி காரணமாக பரவலாக மழை பெய்தது.  குறிப்பாக கொள்ளிடம், சிதம்பரம் ஆகிய பகுதிகளில் நல்ல மழை பதிவு ஆகி உள்ளது.

வங்க கடலில் தற்பொழுது இலங்கைக்கு கிழக்கே 200 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி இன்று வலு பெற்று குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதியாக மாற கூடும்.  ஆனால் வானிலை படிவங்களில் இந்த சலனத்தின் பாதை மற்றும் வலு குறித்து ஒத்த கருத்து நிலவ வில்லை.  சில படிவங்கள் இந்த குறைந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலம் வட மேற்காக நகர கூடும் என எதிர்பார்கின்றன, மேலும் சில வானிலை படிவங்கள் மேற்கு வடமேற்காக நகர கூடும் என எதிர்பார்கின்றன.

15_11

இது எவ்வாறு இலங்கை நில பகுதியுடன் தொடர்பு கொள்ளும் என்பது பொருத்து இந்த சலனத்தின் பாதை மற்றும் மழை கொடுக்கும் திறன் உருவாகும்.  இந்நிலையில் ஒவ்வொரு நாளும் நிகழ்வுகள் மாறும் சூழலுக்கு ஏற்றவாறு மழை பெய்யும் இடம் மற்றும் அளவு மாறக்கூடும்.

15_11_1

ஆனால் இன்றும் நாளையும் தமிழகத்தின் கடலோர பகுதிகளுக்கு பரவலாக மழை இருக்கும் என்பதில் எள்ளளவும் ஆய்யமில்லை.  இன்று குறிப்பாக நாகப்பட்டினம், கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கண மழை எதிர்பார்க்கலாம். வட கடலோர பகுதிகளில் சென்னை முதல் புதுச்சேரி வரை இன்று பரவலாக மழை எதிர்பார்க்கலாம்.  அதே போல் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய உட்புற பகுதிகளுக்கும் மழை வாய்ப்பு நிலவி வருகிறது.