உட்புற மாவட்டங்களில் இன்று மழை வாய்ப்பு

வட தமிழகத்தில் கடந்த இரு தினங்களாக கொட்டி தீர்த்த மழை நேற்று மாலை முதல் நின்று உள்ளது.  இன்றும் மழை வாய்ப்பு குறைந்தே காணப்படுகிறது. வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னைக்கு இன்று மழை இல்லாதது ஓர் ஆறுதல் ஆகும்.

Weather_map

தற்பொழுது சென்னைக்கு வட கிழக்கே குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி நிலை கொண்டு உள்ளது.  இது மேலும் வலு பெரும் சாத்தியங்கள் சற்று குறைவு என வானிலை படிவங்கள் கணிக்கின்றன. அடுத்த ஓரிரு நாட்களில் இது மேற்கு தென்மேற்காக நகர்ந்து உட்புற பகுதிகளில் நகர கூடும்.

இன்று தமிழகத்தின் உட்புற மாவட்டங்களில் குறிப்பாக மேற்கு பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய கூடும்.

கடலோர மாவட்டங்களில் சில வானிலை படிவங்கள் நாளை முதல் சற்று மிதமான மழை ஒரு சில இடங்களில் பெய்ய கூடும் என எதிர் பார்க்கின்றன.