மேற்கு தமிழகத்தில் மழை வாய்ப்பு

கடந்த பல நாட்களாக வட தமிழக பகுதிகளை புரட்டி எடுத்த மழை நேற்று முழுவதும் நின்று இருந்தது நிவாரண பணியை போர்கால அடிப்படையில் நடத்த பெரும் உதவியாக இருந்தது. மேலும் சென்னையின் குடிநீர் பிரதான ஏரிகளுக்கும் நீர் வரத்து குறைய துவங்கி உள்ளது இது அடையாறு மற்றும் கூவம் ஆகிய நதிகளில் வெள்ளம் வெகு விரைவில் நிற்க துவங்கும்.

வங்க கடலில் நிலை ஆந்திர கரை அருகே நிலை கொண்டிருந்த குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி தற்பொழுது மேற்கு நோக்கி நகர்ந்து தற்பொழது சென்னைக்கு வடக்கில் ஆந்திரா நிலபகுதியில் உள்ளது.  இது மேலும் வலு குறைந்து தென் மேற்கு திசையில் நகர்ந்து முற்றிலும் வலு குறைந்து விடும். அடுத்த ஓரிரு நாட்களில் கீழை காற்று மீண்டும் உருவாகி வரும் நிலையில் கடலோர பகுதிகளில் அவ்வபொழுது பருவ மழை பெய்ய கூடும்.

இது தென் மேற்காக நகர்ந்து வரும் பொழுது தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் சில பகுதிகளில் பலத்த மழை பெய்ய கூடும்.  குறிப்பாக இன்று கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

19_11

சென்னையில் வானம் ஓரளவு மேக மூட்டமாக இருக்க கூடும். பகல் நேர வெப்பம் 30° வரை எட்ட கூடும். மாலை அல்லது இரவு பொழுதில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய கூடும்.  மேற்கு புறநகர் பகுதிகளில் ஓரிரு இடங்களில் சற்று பலத்த மழை பெய்ய கூடும்.