அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி

நேற்று வட தமிழகத்தின் சில பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.  குறிப்பாக சென்னைக்கு குடிநீர் தரும் ஏரிகளின் நீர் ஆதர பகுதிகளான ஆவடி, பூண்டி, செம்பரம்பாக்கம் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது.  இதே போல் இரவு பொழுதில் சென்னை நகர பகுதிகளில் சற்றே மிதமான மழை பதிவு ஆகியது.

இந்நிலையில் அரபிக்கடல் பகுதியில் லட்சதீபம் அருகே ஓர் குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.  இதன் காரணமாக கேரளா மற்றும் கடலோர கர்நாடக பகுதிகளில் பரவலாக மழை பெய்ய கூடும். மேலும் காவேரி / கபினி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ய கூடிய வாய்புகள் அதிகமாக உள்ளது.

தமிழகத்தில் மேற்கு பகுதிகளில் இன்றும் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.  குறிப்பாக கோயம்புத்தூர். திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய கூடும்.  காற்றின் ஈர்ப்பு காரணமாக நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிக பலத்த மழை பெய்ய கூடிய வாய்ப்பு உள்ளது.

20_11

இதே போல் வட தமிழகத்தின் கடலோர பகுதிகளில் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.  சென்னை முதல் புதுச்சேரி வரையிலான பகுதிகளில் மாலை அல்லது இரவு பொழுதில் சற்றே மிதமான மழை பெய்ய கூடும்.