வங்க கடலில் குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலை

வங்க கடலில் தென் மேற்கு கடல் பகுதியில் ஓர் புதிய காற்று அழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.  இலங்கைக்கு அருகே நிலை கொண்டுள்ள இந்த காற்று அழுத்த தாழ்வு நிலை காரணமாக காரணமாக தமிழகத்தின் கடலோர பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

கடந்த சில தினங்களாக கீழை காற்றின் வீரியம் சற்று அதிகமாகி உள்ளது.  அரபிக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதியின் உந்துதல் காரணமாக கீழை காற்று பலமடைய துவங்கியது.  இந்நிலையில் மேற்கூறிய குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலை காரனமாக கடலோர பகுதிகளில் மழைக்கான வாய்ப்பு அதிகரித்து உள்ளது.

22_11

குறிப்பாக தென் தமிழ்நாடு மற்றும் டெல்டா மாவட்ட பகுதிகளில் பரவலாக மழை எதிர் பார்க்கலாம். ஒரு சில இடங்களில் மழை சற்று பலமாக இருக்க கூடும்.  தற்பொழது உள்ள வானிலை படிவங்களை ஆராய்ந்தோம் எனில் இந்த சலனம் வலுவடைந்து குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதியாக மாற கூடிய வாய்ப்பு சற்று குறைந்தே காண படுகிறது. ஆனால் கீழை காற்றின் பலம் காரணமாக கடலோர பகுதிகளில் மழை வாய்ப்பு பலமாக உள்ளது.