வட கடலோர மாவட்டங்களில் இன்று முதல் மழை குறைய கூடும்

கடந்த சில தினங்களாக வட தமிழக பகுதிகளில் கொட்டி தீர்த்த மழை இன்று முதல் சற்று ஓய்வு அடைய கூடும்.  நேற்று சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் மாலை முதல் நள்ளிரவு வரை கண மழை பல இடங்களில் பொழிந்தது.

குறிப்பாக அண்ணா பல்கலைகழக தானியங்கி வானிலை மையத்தில் ஒரு மணி நேரத்தில் 7 செ.மீ. மழை மாலை 5:30 முதல் 6:30 மணி வரை பதிவு ஆகியது. இதை நாம் ஓர் திடீர் பெருமழை (cloudburst) நிகழ்வாக கருதலாம்.

24_11_1

தற்பொழுது இந்த குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலையின் தாக்கம் குறைந்து விட்டதால் இன்று முதல் வட கடலோர மாவட்டங்களில் அடுத்த சில தினங்களுக்கு மழை சற்று குறைய கூடும் என எதிர்பரக்கலம்.

இன்று காலை வரை பாண்டி முதல் நாகப்பட்டினம் வரையிலான கடலோர பகுதிகளில் மழை நிலவக்கூடும். முற்பகல் முதல் மழை இப்பகுதிகளில் குறைந்து விடும். மதியம் மற்றும் மாலை நேரத்தில் உட்புற பகுதிகளில் திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய கூடும்.  தென் தமிழக கடலோர பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் மழை இன்று மழை பெய்ய கூடும்.