தமிழகத்தில் வறண்ட வானிலை நீடிக்கும்

நவம்பர் முதல் விடாது பெய்து வந்த வடகிழக்கு பருவ மழை நேற்று தற்காலிகமாக நின்றது. சென்னை, கடலூர், காஞ்சிபுரம் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தேங்கி நிற்கும் வெள்ளம் வடிவதற்கு ஏதுவாக நேற்று பகல் பொழுதில் சற்றே தெளிவான வானம் வட தமிழகத்தின் பல பகுதிகளில் நிலவியது.

இந்நிலையில் இன்றும் தமிழகத்தின் அனேக பகுதிகளில் வறண்ட வானிலையே நீடிக்கும்.  அடுத்த ஓரிரு நாட்களுக்கு வட கடலோர பகுதிகளில் மழை வாய்ப்பு சற்று குறைவாகவே உள்ளது.  இது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஓர் நற்செய்தி ஆகும்.

தென் மேற்கு வங்க கடலில் ஓர் குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாக இந்திய வானிலை துறை அறிவித்து உள்ளது.  இது வெள்ளி அன்று குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதியாக மாற கூடும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன

25_11

குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி உருவாகுவதில் வானிலை படிவங்களிடையே ஒருமித்த கருத்து நிலவி உள்ள போதிலும் இந்த சலனத்தின் பாதை மற்றும் கால நிகழ்வில் சற்று முரண்பாடு  நிலவி வருகிறது.  இந்நிலையில் நாளை இதன் தாக்கம் பற்றி சற்று தெளிவு கிடைக்கும்.

இன்று மற்றும் நாளை வறண்ட வானிலை நிலவி வரும், சென்னையில் இன்று வானம் தெளிந்தே காணப்படும்.