கடலோர தமிழகத்தில் மீண்டும் மழை வாய்ப்பு

வங்க கடலில் இலங்கைக்கும் அந்தமானுக்கும் இடையே இருந்த மேல் அடுக்கு காற்று சுழற்சி தற்பொழுது குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலையாக மாறி உள்ளது. இதன் காரணமாக கடலோர தமிழத்தில் மீண்டும் மழை வாய்ப்பு உருவாகி உள்ளது.

அடுத்த சில நாட்களில் இந்த குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலை இலங்கை நோக்கி நகர கூடும். இது மேற்கி நோக்கி நகரும் பொழுது தமிழகத்தில் மீண்டும் மழை ஆரம்பிக்கும்.  திங்கள் அன்று இலங்கை கரை அருகே இந்த தாழ்வு நிலை நிலை கொண்டிருக்கும், திங்கள் மற்றும் செவ்வாய் அன்று தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய கூடும்.

இலங்கை அருகே நிலை கொண்டுள்ள தாழ்வு நிலை மேலும் எவ்வாறு நகர்ந்து வலு பெரும் என்பதில் வானிலை படிவங்களில் ஒருமித்த கருத்து இல்லை, ஐரோப்பிய வானிலை படிவம் இந்த தாழ்வு நிலை இலங்கை கரை அருகிலிருந்து தமிழகம் நோக்கி ஓரிரு நாட்களில் நகர்ந்து பின் வட கிழக்காக மீண்டும் வங்க கடல் பகுதியை சென்று மீண்டும் தமிழகம் நோக்கி வரும் என எதிர்பார்கிறது. இதை Loop என ஆங்கிலத்தில் வானிலை ஆர்வலர்கள் அழைப்பர்.

இதே போல் அமெரிக்கா வானிலை படிவம் இலங்கை கரை அருகிலிருந்து அடுத்த 4 – 5 நாட்களுக்கு மிக வலு பெறாமல் தமிழக கரை அருகே நிலை கொண்டு பின்பு தென் மேற்காக நகர்ந்து அரபிக்கடல் பகுதி அடைவதாக கணிக்கிறது.  இவ்விரு நிகழ்வுகளும் நடக்க கூடிய சாத்தியகூறு சற்று குறைவே.  எனவே தற்பொழுது நாம் ஓரிரு நாட்களையே நோக்க வேண்டும்.

28_11

ஆனால் சில நிகழ்வுகளுக்கான சாத்தியம் சற்று அதிகமாக உள்ளதால் நாம் தற்பொழுது டிசம்பர் 1 வரை எதிர்பார்க்கலாம். இன்று முதல் கடலோர பகுதிகளில் மழை மீண்டும் ஆரம்பிக்க கூடும்.  இரவு முதல் சில இடங்களில் அவ்வப்போது கண மழை பெய்ய கூடும்.  குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் மழை பரவலாக பெய்ய கூடும்.  திங்கள் மற்றும் செவ்வாய் தினங்களில் கடலோர தமிழகத்தில் பல இடங்களில் சில சமயம் கண மழை பெய்ய கூடும். இந்த தினங்களில் தென் தமிழகத்தில் திண்டுக்கல் வரை மழை ஊடுருவ கூடும்.  இன்றைய நிலையில் படிவங்களில் கணிப்பு படி புதுவைக்கு தெற்கே கண மழை பெய்ய கூடிய வாய்ப்பு அதிகமாக உள்ளது.