வட கடலோர மாவட்டங்களில் மழை வாய்ப்பு

வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்று அழுத்த தாழ்வு நிலை காரணமாக இன்று வட கடலோர மாவட்டங்களில் மழை வாய்ப்பு உள்ளது.  இலங்கைக்கும் அந்தமானுக்கும் இடையே நிலவி வரும் குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலை வலு பெறாமல் இருக்கும் நிலையில் தற்பொழுது சற்று கிழக்கே அந்தமான் அருகே ஏற்பட்டு வரும் குவிதல் காரணமாக சில வானிலை படிவங்கள் எதிர்பார்த்தபடி அப்பகுதியில் குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடிய வாய்ப்பு உள்ளது.

29_11

இன்று கடலோர பகுதிகளில் சில இடங்களில் மழை பெய்ய கூடிய வாய்ப்பு உள்ளது குறிப்பாக வட கடலோர மாவட்டங்களில் மதியம் முதல் அவ்வபொழுது மழை பெய்ய கூடும். சென்னை முதல் புதுச்சேரி வரையிலான பகுதிகளில் மழைக்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. மாலை மற்றும் இரவு பொழுதில் டெல்டா பகுதிகள் மற்றும் வேதாரண்யம் முதல் தூத்துக்குடி இடைப்பட்ட பகுதிகளில் மழை ஆரம்பிக்க கூடும்.

சென்னையில் மாலை அல்லது முன்னிரவு பொழுதில் அவ்வப்போது சற்றே மிதமான கண மழை பெய்ய கூடும்.