தமிழகத்தில் மழை மேலும் நீடிக்கும்


மேற்கு கடலோரத்தில் இருந்து மேக கூட்டம்  வடக்கு -தெற்காக வட்டமடித்து  கீழை கடலோரம் வரை  பரவியுள்ளது. மேற்கு மேலை உள் மாவட்டங்களையும் மழை விட்டு வைக்கவில்லை. தென் மாவட்டங்களில் மேலை பகுதியில் 30.11.2015 / அதிகாலை 0200 மணி முதல் விட்டு விட்டு  லேசான முதல் மித மழை வரை பெய்கிறது. மழை அளவு 3.0 செ.மி முதல் 5.0 செ.மி வரை.  {கடையம், செங்கோட்டை , ஈரோடு, சங்கரன்கோயில், அந்தியூர், போன்ற மேலை பகுதிகள். இவற்றுடன் சேர்த்து கீழைப்பகுதியில் கடலோர ராதாபுரம், தேவகோட்டை போன்றவை மழை பெற்று உள்ளன}. இன்னும் வங்க கடல் இடிமேகத்தை உண்டாக்கி வருவதால் இன்றும் விட்டு விட்டு மழை கீழை பகுதியில் பெய்ய வாய்ப்பு உண்டு.

291115 23Z