கடலோர மாவட்டங்களில் மழை நீடிக்கும்

சென்னையை கடந்த திங்கள் அன்று உலுக்கிய மழை நேற்று முதல் சற்றே குறைந்து மீட்பு பணிகள்  நடக்க ஏதுவாக இன்றும் சற்று ஒய்ந்திருக்கும் என எதிர்பார்க்க படுகிறது.

தென் மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருக்கும் காற்று அழுத்த தாழ்வு நிலை தற்பொழுது இலங்கை அருகே மன்னார் வளைகுடா பகுதியில் உள்ளது இதன் காரணமாக கடலோர தமிழக மழை நீடிக்கும் வாய்ப்பு உள்ளது.  இன்று குறிப்பாக டெலடா மற்றும் கடலூர், விழுப்புரம், பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் கண மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.  பாண்டி மற்றும் நாகபட்டினம் ஆகிய இடைப்பட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்ய கூடும்

சென்னையை பொறுத்தவரை அவ்வபொழுது மிதமான மழை பெய்ய கூடும் மாலை அல்லது இரவு பொழுதில் சில இடங்களில் சற்றே பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.  இன்று மீட்பு பணிகளுக்கு ஏதுவாக மழை சற்றே குறைந்து இருக்கும். மழை குறைவதால் ஏரிகளிலிருந்து உபரி நீர் வெளியேறும் வாய்ப்பு குறைய கூடும்3_12