டெல்டா மாவட்டங்களில் மழை தொடர கூடும்

கடந்த சில தினங்களாக இலங்கை அருகே நிலை கொண்டிருக்கும் குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி காரணமாக வட கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது குறிப்பாக டெல்டா மற்றும் கடலூர், விழுப்புரம் புதுவை ஆகிய பகுதிகளில் சில இடங்களில் கண மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் இலங்கை அருகே உள்ள குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகர்ந்து அரபிக்கடல் பகுதியை அடைய கூடும் என எதிர்பார்க்க படுகிறது. இதன் காரணமாக அடுத்த ஓரிரு தினங்களில் கடலோர தமிழக பகுதிகளில் பரவலாக மழை பெய்ய கூடும்.  மரக்காணம் முதல் நாகை வரையிலான இடைப்பட்ட பகுதியில் பல இடங்களில் பலத்த மழை பெய்ய கூடும்.

இன்று முதல் உட்புற மாவட்டங்களிலும் மழை பெய்ய கூடும்.  இந்த குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி அரபிக்கடல் பகுதியை அடையும் பொழுது கேரளா மற்றும் குமரி மாவட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

6_12

சென்னையில் இன்று பொதுவாக வானம் சற்றே மேக மூட்டமாக இருக்க கூடும்.  அவ்வப்போது மழை பெய்ய கூடும்.  மிதமான மழையே பரவலாக எதிர் பார்க்கபடுகிறது சில சமயம் சற்றே கனத்த மழை பெய்ய கூடும். அடுத்த ஓரிரு தினங்களில் சென்னையை பொறுத்தவரை மழை முடிவுக்கு வரலாம் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன