சென்னைக்கு மழையிலிருந்து ஒய்வு

கடந்த பல தினங்களாக சென்னையில் விடாது பெய்து வந்த மழை தற்பொழது சற்று ஒய்வு கொடுக்க கூடிய வாய்ப்பு உருவாகி உள்ளது.  இது சென்னை மக்களுக்கு மழை பாதிப்பிலிருந்து நிவாரணம் பெற ஓர் நல்ல சந்தர்பத்தை உருவாக்கி உள்ளது.

குமரி கடல் அருகே நிலை கொண்டுள்ள குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி அடுத்த ஓரிரு நாட்களில் அரபிக்கடல் பகுதியை அடைய கூஒடும்.  இதன் காரணமாக தென் தமிழக கடலோர பகுதிகளில் மற்றும் டெல்டா மற்றும் அதனை ஒட்டிய கடலோர பகுதிகளில் மழை தொடர வாய்ப்பு உள்ளது. இந்த சலனம் மேற்கு நோக்கி நகரும் பொழுது உட்புற மாவட்டங்களில் மழை பரவலாக பெய்ய கூடும்.

7_11_1

இந்த நிலையில் சென்னையை பொறுத்த வரை கொட்டி தீர்த்த மழை சற்று ஒய்வு எடுக்கும் நேரம் வந்துள்ளது. மத்திய இந்திய பகுதியில் நிலை கொண்டு வரும் வலஞ்சுழல் (உயர்ந்த காற்று அழுத்தம் / High Pressure) காரணமாக காற்றின் திசை சற்று மாறி கீழை காற்று வட கிழக்க வீச கூடும்.  இது உலர்ந்த காற்றாக சென்னையை நோக்கி வருவதால் மழை வாய்ப்பு குறைந்து அடுத்த சில தினங்களுக்கு சென்னையில் வறண்ட வானிலை நிலவ வாய்ப்பை உருவாக்கி உள்ளது