தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை ஓரிரு நாட்களில் குறைய கூடும்

நவம்பர் முதல் விடாது பெய்து வரும் வடகிழக்குக் பருவ மழை அடுத்த ஓரிரு நாட்களில் குறைய கூடும். கடந்த சில தினங்களாக வட தமிழகத்தில் மழை சற்றே ஓய்ந்து உள்ளது. தென் தமிழகத்தில் பரவலாக பெய்து வந்த மழை நேற்று முதல் குறைய தொடங்கி உள்ளது.

தென் இந்திய தீபகற்பத்தின் இருபுறமும் நிலவி வரும் காற்று அழுத்த தாழ்வு நிலை வட இந்திய பகுதியில் இருந்து வரும் உயர் காற்று அழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கம் காரணமாக அடுத்த ஓரிரு நாட்களில் வலு இழக்க கூடும் அவ்வமயம் மழையின் தாக்கமும் குறைய துவங்கும்.

bom 071215 1532Z

கால நிலையியல் கருதுகோள் படி இப்போதைய வானிலை நிலவுகிறது எனலாம். தமிழகத்தில் இருந்து மழை விடை பெறும் நேரம்  வந்து விட்டது. திபெத் அருகில் உயர் காற்றழுத்த மண்டலம் உருவாகி வட கிழக்கிலிருந்து கிளை பரப்புகிறது. மிதமான குளிர் / வாடைக்காற்று நம்மை தாக்கக்கூடும்.கீழே குமரி முனைப் பகுதியில் மலையில் மழை இருக்கும்.

செயற்கைக்கோள் புகைப்படத்தை நோக்கினால் இது தெளிவாக வெளிபடுகிறது. 10 டிகிரி வட பூமத்திய ரேகைக்கு மேல் பகுதியில் வங்க கடல் தெளிந்து காணபடுகின்றது.

10_12_2