சென்னையில் வறண்ட வானிலை மேலும் சில நாட்கள் நீடிக்கும்

சென்னை மற்றும் அதனை சார்ந்த வட தமிழக பகுதிகளில் கடந்த ஓரிரு தினங்களாக மழை ஓய்ந்து வறண்ட வானிலை நீடித்து வருகிறது, இந்நிலை மேலும் சில தினங்களுக்கு நீடிக்க கூடும் என எதிர் பார்க்கபடுகிறது.

தென் இந்திய தீபகற்ப பகுதியில் நிலவி வரும் உயர்ந்த காற்று அழுத்த பகுதி காரணமாக உலர்ந்த காற்று வட தமிழக பகுதிகளில் வீசி வருகிறது இதன் காரணமாக மழை குறைந்து உள்ளது.  நேற்று பகல் நேர வெப்பம் 31.5° வரை எட்டியது.  இது இந்த மாதத்தின் அதிக பட்ச பகல் நேர வெப்பம் ஆகும்.

தென் தமிழகத்தில் குமரி கடலை ஒட்டிய பகுதியில் நிலவி வரும் மேல் அடுக்கு காற்று சுழற்சி காரணமாக சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.  குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி ம் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட பகுதிகளில் இந்த மழை பெய்ய கூடும். மேற்கு கடலோர பகுதிகளில் தென் கேரளா பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய கூடும்.   ஏனைய தீபகற்ப பகுதிகளில் சற்றே வறண்ட வானிலை நீடிக்கும்.