தென் தமிழகத்தில் சில இடங்களில் இன்று மழை வாய்ப்பு

கடந்த சில தினங்களாக தமிழகத்தின் அநேக இடங்களில் வறண்ட வானிலை நீடித்து வருகிறது. இந்நிலையில் அரபிக்கடல் பகுதியில் நிலை கொண்டு வரும் தரை நிலை காற்று அடுத்த தாழ்வு நிலை காரணமாக கேரளா மற்றும் தென் தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக தென் கேரளா மற்றும் தமிழகத்தில் கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது ஒரு சில இடங்களில் சில சமயம் கண மழை பெய்ய கூடும்.  மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் இந்த கண மழைக்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.

மேலும் தென் உட்புற மாவட்டங்களான மதுரை மற்றும் திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று மழை பெய்ய கூடும்.

14_12

வட தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலையே நீடிக்கும், டெல்டா மாவட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய கூடும், இது பொதுவாக சாரல் மழை போல் மிதமான மழையாகவே இருக்கு வாய்ப்பு உள்ளது.  அடுத்த ஒரு வாரத்திற்கு மழை குறைந்து தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலையே நீடிக்க கூடும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன