தமிழகத்தில் அநேக இடங்களில் வறண்ட வானிலை வாய்ப்பு

வட தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக மழை ஓய்ந்து இருந்தாலும் தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டத்தின் சில பகுதிகளில் மழை பெய்து வந்தது.  இந்நிலையில் தமிழகத்தில் அநேக இடங்களில் வறண்ட வானிலை தொடர வாய்ப்பு உள்ளது.

dundee 161215 00Z

வட தென்  கோளங்களின் வெப்ப மண்டல குவியம் தமிழகத்தை விட்டு தெற்கே நகர்ந்து விட்டது. கடலில் இருந்து கூட்டம் கூட்டமாய் குவியல் குவியலாய் வரும் (இடி) மேக வரத்து இனி இருக்காது. இதனால் பெருமழை இல்லை எனலாம். எனினும் அரபிக்கடல் சூடாக இருந்து மேக கூட்டத்தை உருவாக்கி வருகிறது.  இதன் தாக்கம் தென் கோடி தமிழக பகுதியான குமரி, நெல்லை தூடி பகுதிகளில் அவ்வப்போது காணப்படலாம்.

சீனக்கடல் பகுதியில் இருந்து வரும் புயலின் எச்சங்கள் வங்க கடல் பகுதியில் நுழைந்து தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகள் குறைவு. பெரும்பான்மையான தமிழக பகுதிகள் வறண்டே காணப்படும்.