பெருமழையும் மறுபுனரமைப்பும்

திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் ,விழுப்புரம்  கடலூர்  மாவட்டங்களில் பெய்த  மழைகளிலே காஞ்சிபுரம் மாவட்டத்தில்தான்  வடகிழக்கு பருவமழை, ஆரம்பித்த நாளிலிருந்து அதிகம்  பெய்து இருக்கிறது. 1.10.2015 முதல் 20.12.2015 வரையிலான காலகட்டத்தில் செங்கல்பட்டு நகர் மிக அதிகமாக மழை பெற்று உள்ளது. [225 செ.மீ ]

இப்படி இருந்தும் செங்கல்பட்டில் பெரிதாய் வெள்ள பாதிப்பு இல்லாததற்கு காரணம் மழை வெள்ளம் முழுவதும் பாலாற்றில் வடிந்து விட்டது ஆகும். அடையார் ஆற்றை ஆதனூருக்கும் தெற்கே திசை திருப்பி ஊரப்பாக்கம், காட்டான்குளத்தூர், கூடுவாஞ்சேரி , சுந்தரபெருமாள் கோயில், பரனூர் வழியாக பாலாற்றில் இணைத்து விட்டால்  சென்னையில் வெள்ளப்போக்கை கட்டுப்படுத்தி விடலாம்.  இது தமிழகத்தில் இரண்டாவது நதி நீர் இணைப்பு என பெயர் பெறும்

முற்றும் புதிய கோணத்தில் பார்க்கவேண்டிய மற்றொன்று துரைசாமி சுரங்கப்பாதை, ஆதம்பாக்கம் சுரங்கப்பாதை, தில்லை கங்கா நகர் சுரங்கப்பாதை என தாம்பரம் வரை உள்ள சுரங்கப்பாதைகள், பெரும் மழையின் [20 செ. மீ மேல் ] போது அந்தந்த பகுதி மழை நீரை தேக்கி குடி இருப்பு பகுதிகளில் வெள்ளம் வராமல் பார்த்து கொண்டன.

Chennai_Floods

அதே போல வடக்கு தெற்காய் செல்லும் ஜி எஸ் டி சாலையில் கிழக்கு-மேற்கு போக்குவரத்திற்கு உயர் மட்ட மேம்பாலம் அமைப்பதற்கு பதிலாய் சுரங்கப் பாதை அமைத்து தந்தால் ஜி எஸ் டி சாலையில் போக்குவரத்தும் முறைப்படும்; வெள்ள காலங்களில் மழை நீர் தேங்கி வெள்ள அபாயத்தையும்  குறைக்கும்.