வடகிழக்கு பருவ மழை இதுவரை – ஒரு தொகுப்பு

தமிழகத்தில் வறண்ட வானிலை நீடிக்கும் நிலையில் இந்த ஆண்டு வட கிழக்கு பருவ மழை பற்றிய ஒரு தொகுப்பை கொடுக்க இதுவே நல்ல தருணம். தமிழகத்தில் அதிக பட்சமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் சராசரி அளவை காட்டிலும் கிட்டதட்ட முன்று மடங்கு மழை பெய்து உள்ளது.

இதில் குறிப்பாக நோக்கும் பொழுது எல்லா மாவட்டங்களும் சராசரி அளவை காட்டிலும் அதிக மழை பெய்து உள்ளது.

21_12

இதே போல் நாம் இந்திய வானிலை மையங்களில் மழை பதிவை ஆராய்ந்தோம் எனில் வட தமிழக மையங்களே அதிகம் செலுத்துகின்றன.  அதிக மழை பதிவான மையங்கள் வரிசையில் முதல் பத்து இடங்களில் எட்டு வட தமிழக மையங்கள் உள்ளன.

21_12_1

கோவை மற்றும் மதுரை மாவட்டங்கள் சராசரி அளவை காட்டிலும் அதிக மழை பெய்து உள்ள போதும் அங்கு உள்ள வானிலை மையங்கள் குறைவான மழையே பார்த்துள்ளன