சென்னையில் ஒரு கோடைக்காலம்

கடந்த சில நாட்களாக நிலவி வந்த மேல் அடுக்கு காற்று சுழற்சி காரணமாக கத்திரி வெய்யிலின் தாக்கம் குறைந்து இருந்தது. தமிழகத்தின் பல பகுதிகளில் மழை கொடுத்த இந்த மேல் அடுக்கு சுழற்ச்சியின் வலு இழந்து மறைய தொடங்கி உள்ளது.

இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் முதல் கிழக்கிலிருந்து வீசிய தரை காற்று இப்பொழுது மாறி மேற்கிலிருந்து வீச தொடங்கி உள்ளது. இதனால்பகல் நேரத்தில் நிலம் மீது வீசி சென்னையை நோக்கி வரும் காற்று காரணமாக சென்னையில் பகல் நேர வெப்பம் அதிகரிக்க தொடங்கும்.

Weather_map

மேலும் அந்தமானில் தொடங்கி உள்ள தென்மேற்கு பருவ காற்று இன்னும் சில நாட்களில் இந்திய கரைகளையும் அடைந்து விடும். இதனால் சென்னையின் வெப்பத்தை மிதப்படுத்தும் கடல் காற்று வலு இல்லாமலும் நேரம் கடந்தும் தொடங்கி பகல் நேர வெப்பம் அதிகமாகவே நிலவ வழி வகுக்கும்.

இன்று மற்றும் நாளை சற்று மீதமாக இருக்கும் வெப்பம், புதன் முதல் உயர்ந்து இந்த வாரத்தில் ஓரிரு நாள் 40 டிகிரி வரை தொடக்கூடும்.