வடகிழக்கு பருவ மழை 2015 – வட தமிழகத்தில் ஒய்வு

கடந்த இரண்டு மாதங்களாக சென்னையை உலுக்கிய வடகிழக்கு பருவ மழை டிசம்பர் 8 முதல் சென்னையில் இல்லாமல் இருக்கிறது. கிட்ட தட்ட இரு வாரங்களாக வறண்ட வானிலையே சென்னையில் நிலைத்து வருகிறது.

இந்நிலையில் வானிலை படிவங்களின் கணிப்பை நாம் நோக்கினால் வட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வடகிழக்கு பருவ மழை ஓய்ந்தது என கூறலாம்.

23_12_2

மேகத்தின் போக்கையும் காற்றின் திசையும் நாம் ஆராய்ந்தோம் எனில் வெப்ப மண்டல காற்று குவியல் பகுதி இந்திய பெருங்கடல் பகுதியில் தென் துருவத்தை அடைந்து விட்டது என என்னலாம்.  இது வட துருவத்தில் பருவ மழை முடிவுக்கு வருவதற்கான அறிகுறி ஆகும்.

மழை முழுவதும் நிற்கும் என கூறுவதற்கு இல்லை என்ற போதிலும் வட தமிழகத்தில் மழை காலம் முடிவுக்கு வந்து விட்டது என கூறலாம். வங்க கடல் பகுதியில் மழை மேகங்களில் இருக்க கூடிய ஈரப்பதம் பற்றி வானிலை படிவங்களின் கணிப்பை நாம் ஆராய்ந்தோம் எனில் பருவ மழை முடிவு அடைய கூடிய நிலை உறுதிப்படுகிறது

23_12_1

அடுத்த சில தினங்களில் தென் தமிழக கடலோர பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது, பொதுவாக தமிழகதின் ஏனைய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு குறைந்தே காணப்படுகிறது.

23_12

அடுத்த சில தினங்களில் பெய்ய கூடிய மொத்த மழை அளவு கணிப்பும் இதை உறுதி செய்கிறது. இவை அனைத்தும் வட தமிழகத்தை பொறுத்த வரை பருவ மழை முடிவுக்கு வருவதை காட்டுகின்றன