தமிழகத்தின் வறண்ட வானிலை தொடர்கிறது

இந்த வாரம் முழுவதும் தமிழகத்தில் மழை முற்றிலும் குறைந்து உள்ளது. இந்த ஆண்டு முதல் முறையாக வட கிழக்கு பருவ மழை துவங்கியது முதல் நான்கு நாட்கள் தமிழகம் முழுவதும் மழை இல்லாதது இந்த வாரமே நடந்து உள்ளது.

டிசம்பர் 22 முதல் இந்திய வானிலை துறை வெளியிடும் மழை பதிவு புள்ளி விவரம் பட்டியலில் மழை எதுவும் பதிவு ஆகவில்லை. இன்றும் தமிழகத்தில் மழை பெய்வதற்கான அறிகுறி குறைந்தே காணப்படுகிறது.

Capture

தற்பொழுது நிலவும் வானிலை கூற்றின் படி அந்தமான் அருகே உள்ள குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலை  மேற்கு / தென் மேற்காக நகரும் பொழுது கீழை காற்று மீண்டும் துவங்க வாய்ப்பு உள்ளது. நாளை கடலோர தமிழக பகுதிகளில் ஓரிரு இடங்களில் இதன் காரணமாக சாரல் மழை பெய்ய கூடும்.

ஞாயிறு அல்லது திங்கள் முதல் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.  வட தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலையே நீடிக்கும் ஒரு சில சமயங்களில் சாரல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.  ஆனால் சென்னையை பொறுத்தவரை கன மழை வாய்ப்பு குறைந்தே காணப்படும்.