தென் இந்தியாவின் கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை வாய்ப்பு

கடந்த ஒரு வாரமாக வறண்ட வானிலை முற்றிலுமாக நிலவி வந்த சூழ்நிலையில் அடுத்த சில நாட்களுக்கு சில இடங்களில் மழை பெய்ய மீண்டும் வாய்ப்பு உருவாகி உள்ளது.   குறிப்பாக தென் தமிழ் நாடு மற்றும் இலங்கை பகுதிகளில் சற்றே மிதமான மழை பெய்ய கூடும்.

அந்தமான் பகுதிகளில் நிலவி வரும் குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலை அடுத்த ஓரிரு நாட்களில் மேற்கு / தென் மேற்காக நகர்ந்து இலங்கை  அருகே வலுவிழக்க கூடும். இதன் காரணமாக அடுத்த சில நாட்களில் இலங்கை மற்றும் தென் தமிழக பகுதிகளில் மழை வாய்ப்பு உருவாகி உள்ளது.

26_12_1

வங்க கடலில் ஈரப்பதம் குறைந்தே காணப்படுவதால் கன மழை வாய்ப்பு சற்று குறைந்தே இருக்கும்.  ஓரிரு இடங்களில் சில சமயம் கண மழை பெய்ய கூடும் ஆனால் பொதுவாக மித மழை எதிர்பார்க்கலாம்.

26_12

இந்த நிலையில் கடலோர தென் ஆந்திர மற்றும் வட தமிழக பகுதிகளில் ஓரிரு இடங்களில் காற்று குவிதல் காரணமாக இன்று மழை பெய்ய கூடும். கன மழை வாய்ப்பு குறைந்தே உள்ள போதிலும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய கூடும்.  சென்னையில் மேக மூட்டமாக வானம் இருக்கும், மாலை / இரவு பொழுதில் சாரல் மழை வாய்ப்பு உள்ளது.