தமிழகத்தில் பரவலாக தெளிந்த வானிலை வாய்ப்பு

இலங்கை அருகே உள்ள குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலை காரணமாக நேற்று தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்தது. குறிப்பாக மணிமுத்தாறு, தூத்துக்குடி, கோவில்பட்டி மற்றும் திருசெந்தூர் பகுதிகளில் மழை பதிவு ஆகியது.  டெல்டா மாவட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் காலை நேரங்களில் மழை பதிவு ஆகியது. ஏனைய தமிழக பகுதிகளில் பரவலாக வறண்ட வானிலையே காணப்பட்டது.

வட தமிழக பகுதிகளில் சென்னையை ஒட்டி சனி இரவு அன்று சாரல் மழை சில இடங்களில் பதிவு ஆனது. இதை தவிர பொதுவாக வட தமிழகத்தில் டிசம்பர் 10 முதல் வறண்ட  வானிலையே காணபடுகின்றது. இந்நிலை புத்தாண்டு வரை தொடர கூடும்.  அடுத்த ஒரு வாரம் / 10 நாட்களுக்கு வட தமிழத்தில் மழை வாய்ப்பு மிகவும் குறைவே.

28_12

இலங்கை அருகே உள்ள குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலை நிலபகுதிகளின் மேல் உள்ளதால் வலு இழந்து வருகிறது. இதன் காரணமாக வானிலை படிவங்களின் கணிப்பை விட நேற்று மழை அளவு சற்று குறைந்தே காணப்பட்டது. மேலும் இன்று பரவலான மழை பெய்யும் வாய்ப்பும் குறைவே.  கடலோர பகுதிகளில் ஒரு சில இடங்களில் அவ்வபொழுது மித மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.  இதுவும் இன்று பிற்பகல் பகுதி முதல் நிற்க அதிக வாய்ப்பு உள்ளது.  அடுத்த சில நாட்களுக்கு மழை வாய்ப்பு குறைந்து சற்று வறண்ட வானிலை நீடிக்க வாய்புகள் அதிகமாக உள்ளது.