2015 வரலாற்றில் அதிக வெப்ப ஆண்டாக முடிவுக்கு வரும் வாய்ப்பு

கடந்த வாரம் கிறிஸ்துமஸ் பண்டிகை அமெரிக்காவில் வட கிழக்கு பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பம் காரணமாக  பனி இல்லாமல் கொண்டாடப்பட்டது. இதே போல் நேற்று குஜராத் மாநிலத்தில் ஒரு சில இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வரை கிட்டத்தட்ட எட்டியது.

இந்த ஆண்டு எல் நினோ மற்றும் புவி சூடாதல் காரணமாகவும் அனேக மாதங்கள் வரலாற்றில் அதிக வெப்ப மாதங்களாக காணப்பட்டது. அக்டோபர் வரை சராசரி அளவை விட 0.71 ° செல்சியஸ் அதிகம் இருந்த வெப்பம் நவம்பர் மாதம்கிட்டதட்ட 1° செல்சியஸ் வரை அதிகரித்தது.

கடல் வெப்பம் சராசரி அளவை விட அதிகமாக உள்ளது புவியின் வெப்பத்தை மேலும் அதிகரிக்கிறது.  கீழ் காணப்படும் வரைபடத்தில் மத்திய பசிபிக் கடல் பகுதியில் நிலவி வரும் அசாதாரண வெப்பம் எல் நினோ உருவாக்கி உள்ள போதிலும் பூமியின் பல கடற்பகுதிகளில் அசாதாரண வெப்ப நிலை நிலவி வருகிறது.

30_12_1

இதன் தாக்கம் நில பகுதிகளில் நிலவி வருகிறது.  நேற்றைய வெப்ப வரைபடத்தை நாம் நோக்கினால் உலகின் அனேக இடங்களில் அசாதரணமான வெப்ப நிலை நீடிக்கிறது. துருவ பகுதிகளில் 30 டிகிரி வரை சராசரி வெப்ப அளவை விட அதிகம் இருக்க கூடும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன.

30_12_2

2014 ஆண்டு வரலாற்றின் அதிக வெப்ப ஆண்டாக தற்பொழுது உள்ளது. 2015 ஆண்டு நவம்பர் வரை வரலாற்றில் அதிக வெப்பத்தை பார்த்து உள்ளது, டிசம்பர் மாதமும் அந்த நிலை நீடித்து உள்ளதால் ஆண்டு முடிவில் சராசரி அளவை விட கிட்ட தட்ட 0.7 டிகிரி வரை அதிகம் இருக்க கூடும் என எதிர்பார்க்கலாம்.