2015 ஆண்டு வானிலை நிகழ்வுகள் – ஒரு தொகுப்பு

கடந்த 2015 ஆண்டு வானிலை நிகழ்வுககளை பொறுத்த வரை ஓர் முக்கிய அத்தியாயம் என நாம் கருதலாம். அசாதரணமா மழை / வெப்பம் / புயல் என எல்லாவற்றையும் இந்த ஆண்டு கொடுத்து உள்ளது. இதில் சில முக்கிய நிகழ்வுகளை ஓர் தொகுப்பாக இங்கு கொடுத்து உள்ளோம்.

  • மார்ச் மாதம் மத்திய மற்றும் வட இந்திய பகுதிகளில் ஓர் அழ்ந்த மேற்கத்திய கலக்கம் (Western Disturbance) காரணமாக வரலாறு காணாத மழை பொழிந்தது.  மகாராஷ்டிரா,  ராஜஸ்தான் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சராசரி அளவை காட்டிலும் பல மடங்கு மழை பெய்தது கீழ் இருக்கும் மார்ச் மாத மழை வரைப்படத்தில் காணலாம்.
  • மார்ச் மாதம் வரலாறு காணாத மழை மே மாதத்தில் வரலாறு காணாத வெப்ப அலையாக மாறியது.  வட இந்தியாவின் பல இடங்களில் வெப்பத்தின் தாக்கம் காரணமாக 2000 பேர் வரை பலி அடைந்தனர். பல இடங்களில் பகல் நேர வெப்பம் தினந்தோறும் 45°  வரை எட்டியது. அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலம் சுறு மற்றும் ஆந்திர மாநிலம் கம்மம் பகுதியில் 48° பதிவு ஆகியது.

  • சென்னையில் மே மாதம் வெப்பம் சற்றே மிதமான இருந்த நிலையில் ஜூலை மாதம் வரிசையாக 7 தினங்களுக்கு பகல் நேர வெப்பம் 40° தாண்டியது.  இறுதியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அதிக பட்ச பகல் நேர வெப்ப சாதனை 0.1° அளவில் சென்னை தவறியது

  • சென்னையின் மழை பற்றி எல்லோரும் பேசிய பொழுதிலும் கடலூர் மாவட்டம் வரலாறு காணாத மழையை சந்தித்தது. குறிப்பாக தீபாவளிக்கு முன் தினம் நெய்வேலியில் ஒரே தினத்தில் 45 செ.மீ மழை பதிவாகியது. புதுச்சேரி அருகே கரையை கடந்த அழ்ந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலம் அப்பகுதியில் பலத்த மழையை கொடுத்தது. கெடிலம் மற்றும் சங்கராபரணி ஆறுகள்  மாவட்டத்தின் பல பகுதிகளில் பெரும் வெள்ள சேதத்தை ஏற்படுத்தியது

உலக அளவில் வானிலை நிகழ்வுககளை நாம் ஆராய்ந்தோம் எனில் ஜூலை மாதம் பசிபிக் கடல் பகுதியில் ஒரே சமயத்தில் ஆறு புயல் சின்னங்கள் நிலை கொண்டிருந்தது ஓர் சிறப்பு நிகழ்ச்சி என கொள்ளலாம்

  • இதே போல் ஏமன் நாட்டில் புயல்கள் மிக அரிது ஆனால் இந்த ஆண்டு பத்து தினங்களுக்குள் இரு முறை புயல் அடித்தது நவம்பர் மாதம் சப்பளா மற்றும் மேக் புயல் எமன் நாட்டில் கரை கடந்தது
  • சென்னை மழையை பற்றி எல்லோராலும் பேசப்பட்டு விட்டதால் அதை பற்றி இங்கு அதிகம் பேசாமல் இந்த மழை காரணமாக சென்னை மாநகரம் மாறியது ஓர் நல்ல மாற்றம் என்பதை எடுத்து கொள்ளலாம். “நமக்கு நாமே” என சென்னைவாசிகள் ஒவ்வொருவரும் மழை முடிந்த பின் தெரிந்தவர்கள் அறியாதவர்கள் என பார்க்காமல் உதவி செய்தது மக்கள் சக்திக்கு ஓர் நல்ல எதிர்காலம் உள்ளது என்பதை உணர்த்தியது.