மேற்கு கடலோர பகுதிகளில் வெப்ப தாக்கம் தொடரக்கூடும்

டிசம்பர் மாத இறுதியில் மேற்கு இந்தியாவில் பல பகுதிகளில் வரலாறு காணாத வெப்ப தாக்கம் நிலவியது.  சூரத், அகமதாபாத், மும்பை ஆகிய இடங்களில் டிசம்பர் மாதத்தின் உச்ச வெப்ப நிலை பதிவானது.  2015 ஆண்டின் இறுதி நாள் அன்று மும்பை இந்தியாவில் அதிக வெப்பம் பதிவான இடமானது.

இது மேல் நோக்கி பார்த்தோம் எனில் சற்றே வியப்பாக இருந்தாலும் ஆண்டின் இந்த பகுதியில் சாதரணமாக மேற்கு கடலோர பகுதிகளில் கோடைகாலத்தில் நிலவ கூடிய வெப்ப தாக்கம் தற்பொழுதும் நிலவ கூடும்.  கிழக்கில் இருந்து வரும் தரை காற்று காரணமாக பகல் பொழுதில் வெப்பம் சற்றே அதிகரித்து காணப்படும்.

3_1

வெப்ப ஒழுங்கின்மை (Temperature Anomaly) வரைபடத்தை நாம் பார்த்தோம் எனில் மேற்கு கடலோர பகுதிகளில் வெப்பம் சராசரி அளவை ஒட்டியே உள்ளது, உட்புற பகுதிகளில் அசாதாரண வெப்ப நிலை நிலவி வருவதை இந்த வரைபடம் காட்டுகிறது. ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் கிழக்கு கடற்கரை பகுதிகளில் மேற்கிலிருந்து வீசும் நிலக்காற்று இந்த பருவத்தில் கிழக்கிலிருந்து மேற்காக வீசுவதே பகல் நேர வெப்பம் அதிகரிக்க காரணமாகும்.

4_1_16_1

இன்றும் பொதுவாக மேற்கு கடலோர பகுதிகளில் பல இடங்களில் பகல் நேர வெப்பம் 35° வரை எட்ட கூடும்.  குறிப்பாக கொண்கன் முதல் மத்திய கேரளா பகுதி வரை உள்ள பகுதிகளே இந்தியாவின் அதிக வெப்ப பகுதிகளாக இருக்க கூடும். மேலும் உட்புற பகுதிகளில் தெலுங்கானா, ராயலசீமா மற்றும் வடக்கு கர்நாடகாவில் சில பகுதிகளில் பகல் நேர வெப்பம் 35° வரை எட்ட கூடும்.

கிழக்கு கடற்கரை பகுதிகளில் பகல் நேர வெப்பம் 30° வரையில் இருக்க கூடும்.  தமிழகத்தின் உட்புற பகுதிகளில் குறிப்பாக தர்மபுரி / வேலூர் / திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இரவு நேரத்தில் குளிர் 15° வரை எட்ட கூடும்.