வட தமிழகத்தில் வெப்ப அலை தாக்கம்

கடந்த சில நாட்களாக வெய்யிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்நிலையில் இந்திய துணை கண்டத்தின் பல பகுதிகளில் வெப்ப அலை வீச துவங்கி உள்ளது. நேற்று நாக்புர் ஒட்டி உள்ள பகுதிகளில் வெப்பம் 45⁰ டிகிரி வரை எட்டியது.

15052012_2_1918

வட தமிழக பகுதிகளில் அடுத்த சில தினங்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். வேலூர், திருத்தணி, அரக்கோணம் போன்ற இடங்களில் பகல் நேர வெப்பம் 40⁰ டிகிரி வரை எட்ட கூடும்.

ytemp

சென்னையில் கடந்த இரு தினங்களாக ஆண்டின் அதிக பட்ச பகல் நேர வெப்ப நிலையை அடைந்து உள்ளது, இது மேலும் தொடர்ந்து ஓரிரு நாளில் 40⁰ டிகிரி தொட கூடும்.