தமிழ்நாட்டின் உட்புற பகுதிகளில் குளிர் தாக்கம்

வடகிழக்கு பருவ மழை ஓய்ந்து உள்ள நிலையில் கடந்த ஓரிரு தினங்களாக இரவு நேர குறைந்த வெப்ப நிலை குறைந்தே காணபடுகின்றது. நேற்று திருப்பத்தூர், வேலூர் மற்றும் தர்மபுரி பகுதிகளில் 15° அளவில் இரவு நேர வெப்பம் பதிவாகியது.

வளி மண்டலத்தில் நிலவி வரும் ஈரப்பதம் இல்லா நிலை காரணமாக தமிழகத்தில் பொதுவாக மேகம் இல்லாமல் தெளிந்த வானம் ஓரிரு தினங்களாக நிலவி வருகிறது.  இதனால் பகல் நேரத்தில் சற்றே வெப்பத்தின் தாக்கம் காணப்பட்டலும் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் உட்புற மாவட்டங்களில் பனி பொழிவும் குளிர்ந்த வாடை காற்றையும் உருவாக்கி வருகிறது.

மேலும் தென் இந்திய பகுதிகளில் நிலவி வரும் அதிக காற்று அழுத்த நிலை இந்த குளிர் காலம் ஆரம்பிக்க ஓர் காரணமாகும்.  மத்திய இந்திய பகுதிகளில் கீழ் நோக்கி வருவதால் உட்புற பகுதிகளில் இதன் தாக்கம் சற்றே அதிகமாக தெரிகிறது.

4_1

இந்த நிலை அடுத்த ஓரிரு தினங்களுக்கு நீடிக்க கூடும் என எதிர்பார்க்கலாம். குறிப்பாக தெற்கு கர்நாடகா, ராயலசீமா மற்றும் வட உட்புற தமிழக பகுதிகளில் பல இடங்களில் இரவு நேர வெப்ப நிலை 15° வரை எட்ட கூடும்.  காலை நேரங்களில் இந்த பகுதிகளில் மூடு பணிக்கும் வாய்ப்பு உள்ளது.