தென் இந்தியாவில் வறண்ட வானிலை நீடிப்பு

கடந்த சில தினங்களாக நீடித்து வரும் வரண்ட வானிலை தென் இந்தியாவில் குளிர் காலம் துவங்க உதவி புரிந்து உள்ளது.  நேற்று தக்காண பீடபூமி பல பகுதிகளில் இரவு நேர வெப்ப நிலை குறைந்து காணப்பட்டது.  மைசூர் பகுதிகளில் 10 டிகிரி வரை எட்டிய குறைந்த வெப்ப நிலை மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மேலும் குறைந்து ஊட்டி பகுதிகளில் 4 டிகிரி வரை எட்டியது. 

இந்த நிலை உருவாக தெளிந்த வானம் ஓர் முக்கிய காரணம் ஆகும்.  பகல் நேரத்தில் சற்றே அதிகமாகவும் இருக்கும் வெப்பம் தரையிலிருந்து வளி மண்டலத்திற்கு பரவ ஏதுவாக தெளிந்த வானம் உதவுவதால் இரவு பொழுதில் வெப்ப நிலை குளிர்ந்து மூடுபனி உருவாக வழி வகிக்கிறது.

Max_Temp_5_1

மேற்கு கடலோர பகுதிகளில் பகல் நேர வெப்ப நிலை அதிகமாகவே காணப்படும்.  தமிழ்நாட்டில் கடலோர பகுதிகளில் சற்றே மிதமான வெப்ப நிலை நிலவினாலும் உட்புற பகுதிகளில் ஓரிரு இடங்களில் சற்று அதிகமாக இருக்க கூடும்.  குறிப்பாக தென் தமிழக பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் சற்று அதிகமாக இருக்க கூடும்.

Min_Temp_5_1

நேற்று போலவே இன்றும் தக்காண பீடபூமியின் பல பகுதிகளில் இரவு நேர வெப்பம் மிக குறைவாக நிலவ கூடும்.  நீலகிரி மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இரவு நேர வெப்பம் 10°க்கும் குறைவாக நிலவ கூடிய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தின் மேற்கு உட்புற மற்றும் வடக்கு உட்புற மாவட்டங்களில் சில இடங்களில் குளிரின் தாக்கம் ஏனைய பகுதிகளை காட்டிலும் சற்று அதிகமாக இருக்க கூடும். இப்பகுதியில் ஓரிரு இடங்களில் 15° வரை வெப்ப நிலை எட்ட கூடும்.