வட இந்தியாவில் அசாதாரண குளிர் காலம் தொடர்கிறது

கடந்த சில தினங்களுக்கு முன் நமது வலை பதிப்பில் மேற்கு கடலோர பகுதிகளில் நிலவி வரும் வெப்ப தாக்கம் பற்றி எழுதி இருந்தோம்.  இன்று நாம் வட இந்தியாவில் நிலவி வரும் அசாதரண குளிர் காலம் பற்றி பார்ப்போம்.  வட இந்தியாவில் டிசெம்பர் முதலே கடும் குளிர் காலம் ஆரம்பித்து விடும், குறிப்பாக  புத்தாண்டு துவக்கம் பொழுது உச்ச கட்ட குளிர் காலம் ஆரம்பித்துவிடும்

ஆனால் இந்த ஆண்டு இந்தியாவில் பல பகுதிகளில் பகல் நேர வெப்பம் சராசரி அளவை விட உயர்ந்தே காணபடுகின்றது. காஷ்மிர் மாநிலத்தில் டிசம்பர் 21 முதல் கடும் குளிர் காலம் என அழைக்கப்படும் “சில்லை கலான்” துவங்கிய போதிலும் பொதுவாக வெப்ப நிலை உரை நிலைக்கும் மேலே உள்ளது.  ஸ்ரீநகர் பகுதிகளில் புது வருடம் துவங்கிய பிறகே இந்த ஆண்டின் குளிர் காலத்து முதல் பனி பொழிவு துவங்கியது.

7_1

டில்லியின் வெப்ப நிலை அட்டவணை நாம் நோக்கினால் இந்த ஆண்டு நிலவி வரும் அசாதாரண வெப்ப நிலை தெளிவு ஆகிறது.  பல நாட்கள் 20°மேல் இருக்கும் வெப்ப நிலை சில நாட்கள் 25° வரை தொட்டு உள்ளது.

மேலும் வெப்ப நிலை வரைபடத்தை நாம் ஆராய்ந்தோம் எனில் தென் இந்திய பகுதி தவிர இந்தியாவின் எனைய எல்லா பகுதிகளில் சராசரி அளவை விட வெப்பம் அதிகம் இருப்பதை உணர்த்துகிறது.

7_1_1

குறிப்பாக வடக்கு மற்றும் வட மேற்கு பகுதிகளில் இந்த ஒழுங்கின்மை சற்றே அதிகமாக இருப்பதை நாம் தெளிவாக காணலாம்.

தென் இந்தியாவை பொறுத்தவரை பகல் நேர வெப்பம் கடந்த சில தினங்களாக நிலவி வருவது போல் இன்றும் தொடர கூடும். இரவு நேர வெப்பத்தில் சற்றே மாறுதல் இருக்க கூடும்.  குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் இரவு நேர வெப்பம் சற்று உயர கூடும்.