வடகிழக்கு பருவ மழை முடிவுக்கு வந்தது – இந்திய வானிலை துறை

இந்திய வானிலை துறையை பொறுத்த வரை டிசம்பர் 31 வரை பெய்யும் மழை வடகிழக்கு பருவ மழை கணக்கில் இருக்கும்.  ஜனவரி 1 முதல் பெய்யும் மழை குளிர்கால மழையாக கருதப்படும். ஆனால் வடகிழக்கு பருவ மழை முடிவுக்கும் வருவது காற்று, மழை மற்றும் வானிலை நிலை அமைப்பை கணக்கில் இட்டு வேறோர் நாள் அமைய கூடும்.

இந்த ஆண்டு டிசம்பர் 10 முதல் வட தமிழக பகுதிகளில் மழை முற்றிலும் குறைந்தது. தென் தமிழகத்தில் டிசம்பர் கடைசி வாரத்தில் மழை முற்றிலும் குறைந்தது இந்நிலையில் இந்திய வானிலை துறை நேற்று வடகிழக்கு பருவ மழை தமிழகம், ஆந்திர பிரதேசம் மற்றும் கர்நாடகா பகுதிகளில் முடிவுக்கு வந்தது என அறிவித்து உள்ளது.

NEM_Withdrawal

இன்று தென் இந்தியாவில் பகல் நேர வெப்பம் சற்று மிதமாக நிலவ கூடும். மேற்கு கடலோர பகுதிகளில் வெப்பம் 35° வரை இருக்க கூடும். ஆனால் ஏனைய தென் இந்திய பகுதிகளில் பகல் நேர வெப்பம் கடந்த சில தினங்களை விட சற்றே குறைந்து காணப்படும்.

8_1

அதே போல் இரவு நேர வெப்ப நிலை ஓரிரு டிகிரி அதிகரித்து மிதமான தட்பவெப்ப நிலை பொதுவாக நிலவ கூடும். மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த வாரம் நிலவியது போல் கடும் குளிர் நிகழ்வது சற்று குறைந்த 10° மேல் இருக்க கூடும்.

8_1_1