சென்னையில் காலை நேர வெப்பநிலை குறைய கூடும்

இன்று சென்னையில் நுங்கம்பாக்கம் இந்திய வானிலை துறை தானியங்கி வானிலை மையத்தில் 21.3° பதிவாகியது.  இது 2016ஆம் ஆண்டின் குறைந்த பட்ச வெப்ப நிலை ஆகும்.  இதே போல் அண்ணா நகரில் உள்ள சென்னையில் ஒரு மழைகாலம் தானியங்கி வானிலை நிலையத்தில் 20° பதிவாகியது.  இது இந்த குளிர் காலத்தின் மிக குறைந்த வெப்ப நிலை ஆகும்.

ytemp

நாளையும் காலை நேர வெப்ப நிலை குறைந்தே காணப்படும் என எதிர்பார்க்கலாம். இன்று பொதுவாக தென் இந்திய தீபகற்ப பகுதிகளில் பகல் நேர வெப்ப நிலை கடந்த வாரத்தை விட சற்று குறைந்து இருக்க கூடும்.

மேற்கு கடலோர பகுதிகளில் பகல் நேர வெப்பம் 35° வரை எட்ட கூடும். ஏனைய பகுதிகளில் பொதுவாக 30° அளவில் இருக்க கூடும்.

சென்னையில் பகல் நேர வெப்பம் 30° அளவில் இருக்க கூடும். இரவு நேர வெப்ப நிலை  20 / 21° வரை இருக்க கூடும். காலை பொழுதில் புறநகர் பகுதிகளில் மூடு பனி வாய்ப்பு உள்ளது.