தென் இந்தியாவில் குளிர் தாக்கம் நீடிக்க கூடும்

கடந்த சில தினங்களாக சென்னையில் அதிகாலை நேரங்களில் குளிரின் தாக்கம் நீடித்து வருகிறது.  நேற்று நுங்கம்பாக்கம் மற்றும் மீனம்பாக்கம் வானிலை மையங்களில் ஆண்டின் குறைந்த பட்ச வெப்ப நிலை பதிவாகியது. தென் இந்தியாவில் பல பகுதிகளில் இது போல் குளிரின் தாக்கம் நிலவியது.

இந்த நிலை மேலும் ஓரிரு தினங்களுக்கு நீடிக்க கூடும்.  தென் இந்திய பகுதிகளில் நிலை கொண்டுள்ள அதிக காற்று அழுத்த பகுதி காரணமாகவும் பொதுவாக தெளிந்த வானம் இருப்பதாலும் இந்த நிலை உருவாகி உள்ளது.

gfs.t12z.mslp_6h_totp.f030.sasia

தெளிந்த வானம் காரணமாக பகல் நேரத்தில் உருவாகும் தரை வெப்பம் மீண்டும் வளி மண்டலத்தில் சேர்ந்து அடைவதால் இரவு பொழுதில் குளிர்ந்த தட்ப வெப்ப நிலை உருவாக வாய்ப்பு ஏதுவாக மாறுகிறது. மேலும் நாம் காற்று திசைகளை ஆராய்ந்தோம் எனில் வட மேற்கிலிருந்து வரும் தரை காற்று மேலும் குளிரின் தாக்கத்தை அதிகரிக்கிறது.

11_1

தென் இந்தியாவில் பகல் நேர வெப்பம் 30° அளவில் பல இடங்களில் இருக்க கூடும். மேற்கு கடலோர பகுதிகளில் சற்று அதிகமாக 35°அளவை எட்ட கூடும்.  ஏணைய மிதமான வெப்ப நிலை இன்றும் நீடிக்க வாய்ப்பு உள்ளது.   தமிழகத்தில் உட்புற பகுதிகளில் ஓரிரு டிகிரி கடலோர பகுதியை விட அதிகமாக இருக்க கூடும்.

11_1_1

இரவு நேரங்களில் தென் இந்தியாவின் உட்புற பகுதிகளில் பல இடங்களில் 15° வரை குறைந்தபட்ச வெப்ப நிலை பதிவாக கூடும்.  கடலோர தமிழகம் மற்றும் கேரளா தவிர ஏனைய பகுதிகள் அனைத்திலும் 20° கீழ் வெப்ப நிலை நீடிக்க கூடும்.