சென்னையில் வறண்ட வானிலை நீடிக்கும்

சென்னையில் மழை பெய்து கிட்டத்தட்ட ஒரு மாதம் கடந்த நிலையில் புத்தாண்டு துவக்கம் முதல் வானிலையில் குளிர் நிலை நீடித்து வருகிறது. கடந்த சில தினங்களாக காலை நேரங்களில் சென்னையின் புறநகர் பகுதிகளில் வெப்ப நிலை 20°க்கும் கீழ் செல்ல துவங்கி உள்ளது.

இந்தியாவின் பல பகுதிகளில் இந்த ஆண்டு குளிரின் தாக்கம் சற்றே குறைந்து காணப்பட்டலும் தென் இந்திய பகுதிகளில் புத்தாண்டு முதல் குளிர் நிலை சராசரி அளவை ஒட்டி இருக்க துவங்கி உள்ளது. இந்த நிலை மேலும் ஓரிரு தினங்கள் நீடிக்கும் வாய்ப்பு உள்ளது.

12_1

பகல்  நேர வெப்ப நிலையும் பொதுவாக சராசரி அளவை ஒட்டியே நீடிக்க கூடும். மேற்கு கடற்கரை பகுதிகளில் ஒரு சில இடங்களில் 35° வரை எட்ட கூடிய பகல் நேர வெப்பம் ஏனைய தென் இந்திய பகுதிகளில் 30 – 32° வரையில் இருக்க கூடும்.

12_1_1

இரவு நேர வெப்ப நிலை தமிழகத்தின் உட்புற பகுதிகளில் 15° வரை செல்ல  கூடும்.  தமிழகத்தின் கடலோர பகுதிகளில் சற்றே மிதமான தட்பவெப்ப நிலை இருக்கம் என எதிர்பார்க்கலாம். மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் குறிப்பாக நீலகிரி ஒட்டிய இடங்களில் ஒரு சில இடங்களில் இரவு நேர வெப்ப நிலை 10° வரை குறைய கூடும்.

சென்னையில் பகல் நேர வெப்பம் 30° வரையில் உயர்ந்து சற்று வெப்பமாக இருக்க கூடும். தெளிந்த வானம் காரணமாக வெயிலின் தாக்கம் தெரிய கூடும்.  இரவு நேர வெப்ப நிலை 20° வரை எட்ட வாய்ப்பு உண்டு.