உட்புற தமிழக மாவட்டங்களில் இரவு பொழுதில் குளிரின் தாக்கம் தொடரும்

தமிழகத்தின் மேற்கு உட்புற மாவட்டங்களில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் குளிரின் தாக்கம் நிலவி வருகிறது. தர்மபுரி, வேலூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பல இடங்களில் குளிர்ந்த தட்ப வெப்ப நிலை 15° அளவில் பதிவாகி வருகிறது. தக்காண பீடபூமியை ஒட்டிய பகுதிகளில் இந்த தாக்கம் சற்றே அதிகமாக காணபடுகிறது. இந்த நிலை மேலும் சில தினங்களுக்கு நீடிக்க கூடும்.

இந்தியாவின் பிற பகுதிகளில் சராசரி அளவை காட்டிலும் வெப்பநிலை சற்று அதிகரித்து காணப்படுகிறது.  இந்த நிலை எல் நினோ ஓர் காரணம் ஆகும்.  மேலும் இந்த ஆண்டு இது வரை மேற்கிலிருந்து வரும் கலக்கம் சற்று வலு குறைந்தே இருப்பதாலும் குளிரின் தாக்கம் குறைந்து நிலவி வருகிறது.  தென் இந்திய பகுதிகளில் மாத்திரம் வெப்ப நிலை சராசரி அளவை ஒட்டி நிலவி வருகிறது.

16_1

இந்நிலையில் மத்திய இந்திய பகுதிகளில் ஓர் காற்று குவிதல் உருவாகி வருகிறது இதன் காரணமாக மத்திய மற்றும் கிழக்கு இந்திய பகுதிகளில் மழைக்கான வாய்ப்பு உருவாகும்.  இந்த காற்று குவிதல் அடுத்த வாரம் முதல் பகுதியில் சற்றே தெற்கு நோக்கி நகரும் வாய்ப்பு உள்ளது, இதனால் தென் இந்தியாவில் மழைக்கான வாய்ப்பு உருவாக கூடும்.

தமிழகத்தை பொறுத்தவரை உட்புற பகுதிகளில் அடுத்த ஓரிரு நாட்களுக்கு இரவு நேர குளிர் தாக்கம் தொடர கூடும்.  பகல் நேர வெப்பம் சற்றே மிதமாக நிலவ கூடும். சென்னையில் பகல் நேர வெப்பம் 30° அளவில் நிலவும்,  நகரின் மத்திய பகுதிகளில் இரவு நேர வெப்ப நிலை 20° அளவிலும் புறநகர் பகுதிகளில் 19° அளவிலும் இருக்க கூடும்.