தென் இந்தியாவின் சில பகுதிகளில் மழை வாய்ப்பு

நேற்று நமது பதிப்பில் தெரிவித்தது போல் மத்திய இந்திய பகுதிகளில் உருவாகி வரும் காற்று குவிதல் காரணமாக தென் இந்தியாவின் உட்புற பகுதிகளில் சில இடங்களில் மழை பெய்ய கூடிய வாய்ப்பு உருவாகி உள்ளது.  நாளை முதல் சில தினங்களுக்கு இந்த மழை வாய்ப்பு இருக்க கூடும்.

17_1_1

வட மேற்கு இந்திய பகுதியில் உருவாகி வரும் மேல் அடுக்கு காற்று அழுத்த சுழற்சி காரணமாக அரபிக்கடல் பகுதியிலிருந்து ஈர காற்று தென் இந்திய மற்றும் மத்திய இந்திய பகுதிகளில் ஈர்க்கப்படும்.  இந்த ஈர காற்று கிழக்கிலிருந்து வரும் உலர்ந்த காற்றுடன் உறவாடும் பொழுது வளி  மண்டலத்தில் ஓர் நிலை அற்ற தன்மை உருவாக வாய்ப்பு ஏற்படும்.  இதுவே மழை வாய்ப்புக்கான காரணம் ஆகும்.

இந்த காற்று குவிதல் அடுத்த ஓரிரு தினங்களில் கர்நாடக,ஆந்திர மற்றும் தெலுங்கானா பகுதிகளில் சில இடங்களில் மழை கொடுக்க கூடும்.  ஏனைய தென் இந்திய பகுதிகளில் பொதுவாக வானம் மேக மூட்டத்துடன் இருக்க கூடும்.

17_1_2

இந்த மேக மூட்டம் காரணமாக பகல் நேர வெப்பம் சற்று குறைந்து காணப்படும். மேற்கு கடலோர பகுதிகளில் சில இடங்களில் சராசரி அளவை விட குறைந்தும் இருக்க கூடும்.  பரவலாக பகல் நேர வெப்பம் 30° அளவில் இருக்க கூடும்.

17_1_3

பகலில் வெப்பத்தை மட்டுப்படுத்தும் மேகங்கள் இரவிலும் குளிரின் தாக்கத்தை குறைய வழி வகுக்கிறது. பகல் பொழுதில் ஏற்படும் தரை சூடு மீண்டும் வளி மண்டலத்தை அடைவதை மேக மூட்டம் தடுப்பதால் இரவில் வெப்ப நிலை ஓரிரு டிகிரி வரை அதிகமாக இருக்க கூடும்.