சென்னையில் மேக மூட்ட வானிலை நிலவ கூடும்

கடந்த சில தினங்களாக மத்திய இந்திய மற்றும் தென் இந்தியாவின் சில பகுதிகளில் நிலவி வரும் காற்று குவிதல் காரணமாக சில இடங்களில் மழை பெய்து வருகிறது.  இதன் காரணமாக தென் இந்தியாவின் பல பகுதிகளில் வானிலை மேக மூட்டமாக இருப்பதால் பகல் நேர வெப்ப நிலை சற்று குறைந்தும் இரவு நேர வெப்ப நிலை சற்று உயர்ந்தும் உள்ளது.

தற்பொழுது இந்த காற்று குவிதல் சற்றே நகர்ந்து கிழக்கு இந்திய பகுதிகளில் தாக்கம் செய்ய துவங்கி உள்ளது.  இதன் காரணமாக வடகிழக்கு இந்தியாவிலிருந்து ஆந்திர கடலோர பகுதி வரை உள்ள கிழக்கு இந்திய பகுதிகளில் மழைக்கான வாய்ப்பு உருவாகி உள்ளது.  குறிப்பாக ஓடிஸா, பீகார் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் மழை வாய்ப்பு அதிகமாக உள்ளது.

தென் இந்தியாவை பொறுத்த வரை ஆந்திர மற்றும் தெலுங்கானா பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய கூடும். ஏனைய தென் இந்திய பகுதிகளில் வானிலை மேக மூட்டமகவும் சாரல் மழை ஒரு சில இடங்களில் பெய்ய கூடும்.

20_1_1

பகல் நேர வெப்பம் பொதுவாக சராசரி அளவை விட சற்றே குறைந்து இருக்க கூடும்.  ஆந்திர மற்றும் தெலுங்கானா பகுதிகளில் பகல் நேர வெப்பம் சராசரி அளவை விட 3 – 5° வரை குறைந்து இருக்க கூடும்.

20_1_2

ஆனால் இரவு நேர வெப்பம் ஓரிரு டிகிரி வரை அதிகமாக நிலவ கூடும். சென்னையில் மேக மூட்ட வானிலை நிலவ கூடும். நகரில் ஒரு சில இடங்களில் சாரல் மழை வாய்ப்பு உள்ளது. பகல் நேர வெப்பம் மிக மிதமாக 28° வரை எட்டவே கூடும்.  இரவு வெப்ப நிலை சராசரி அளவை விட சற்று அதிகமாக 24° வரை இருக்க கூடும்.